ஜனாதிபதி மாளிகையில் வெளிநபர்கள் யாரும் தங்கவில்லை! ஜனாதிபதி ஊடகப் பிரிவு மறுப்பறிக்கை
ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் தங்கியுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் பொய்யானவை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ அறிக்கை
'2025 ஆம் ஆண்டில், நாடு முழுவதிலும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில் சுமார் 3,089 பேரளவிலான பல்வேறு நபர்கள் தங்கியிருந்தனர்' என செய்தியொன்று வெளியாகியிருந்தது.

இந்நிலையில் குறித்த செய்தியை முற்றிலும் நிராகரித்துள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு, 2025 ஆம் ஆண்டில் ஜனாதிபதி மாளிகை வளாகங்களில் உள்ள ஏனைய கட்டிடங்களில் பாதுகாப்புப் பிரிவினர், ஊடகவியலாளர்கள் மற்றும் அதிகாரிகளே தமது உத்தியோகபூர்வ தேவைகளுக்காகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்கியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்த அதிகாரிகளில் எவரும் ஜனாதிபதி மாளிகைகளைத் தங்குவதற்காகப் பயன்படுத்தவில்லை எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan