ரவி கருணாநாயக்க விரைவில் கைதாகலாம்..
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிர்வரும் 30ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விரைவில் கைது
2015 முதல் 2019 வரை, தேசிய லொத்தர் சபையின் மூன்று ஊழியர்களை ரவி கருணாநாயக்கவின் தனிப்பட்ட பணியாளர்களாகப் பணியாற்ற சட்டவிரோதமாகப் பணியமர்த்திய குற்றச்சாட்டின் பேரில் வாக்குமூலமொன்றைப் பதிவு செய்வதற்காகவே அவர் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு அழைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவராக இருந்த சட்டத்தரணி ஷர்மிலா பெரேரா, இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஆணைக்குழுவின் விசாரணைக்கு முன்னதாக அழைக்கப்பட்டிருந்தார்.
நெருக்கமான வட்டாரங்கள்
அதன்போது சம்பவம் இது தொடர்பாக வாக்குமூலம் பதிவுசெய்த பின்னர், அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். நீதிமன்றம் அதே நாளில் அவருக்குப் பிணை வழங்கியது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்க, மேற்குறித்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்கு அழைக்கப்படவுள்ள நிலையில் அன்றைய தினம் அவரைக் கைது செய்யவும், பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Aanadhi அவரால் எழுதப்பட்டு, 25 July, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri