பிரித்தானியாவில் உடனடியாக பொதுத் தேர்தல்! புதிய பிரதமரின் முக்கிய அறிவிப்பு
உடனடியாக பொதுத் தேர்தலை நடத்தும் எண்ணம் தனக்கு இல்லை என்று பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்போது நாட்டைச் சிறப்பாக இயங்கச் செய்வதே எங்களுடைய மிகப்பெரிய முன்னுரிமையாகும். இந்த நேரத்தில் பொதுத் தேர்தலை நடத்தினால் அந்த முக்கியமான பணிகள் தாமதமாகும் வாய்ப்புக்கள் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுத் தேர்தல் இப்போதில்லை..
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் கியர் ஸ்டார்மர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து பிரித்தானியாவின் புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் பொறுப்பேற்றார்.
இந்த நிலையில், புதிய பிரதமர் உனடியாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று ஏனைய கட்சிகள் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

இது தொடர்பில் பதிலளித்த புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம், “நாங்கள் ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்கின்றோம். கடந்த 2024ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் அறிக்கை இன்னும் நடைமுறையில் உள்ளது.
அதையே நானும் பின்பற்றுகின்றேன். அதற்குள் எனது கொள்கைகளையும், செயல்திட்டங்களையும் முன்னெடுப்பேன்” என குறிப்பிட்டுள்ளார்.
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri