பிரித்தானியாவில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய தடை
பிரித்தானியாவில் குழந்தைகள் நிகோட்டினுக்கு அடிமையாகும் அபாயம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை எதிர்க்கும் நோக்கத்தில், பயன்படுத்திவிட்டு தூக்கி எறியக்கூடிய வேப்கள் (Disposable Vapes) விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது.
இத்தடை ஜூன் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்நிலையில், "இந்த புகைக்கும் சாதனங்கள் நம் தெருக்களில் குப்பையாக மாறிவிட்டன, இப்போது அவற்றுக்கு முடிவுக்காலம் வந்துவிட்டது," என அமைச்சர் மேரி கிரேக் கூறினார்.
மீறினால் சிறை தண்டனை
குறித்த தடையை மீறுவோருக்கு 200 பவுண்டு அபராதம் மற்றும் தொடர்ந்து மீறினால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021இல் அறிமுகமான பயன்படுத்திவிட்டு தூக்கி எறியக்கூடிய வேப்கள், வண்ணமயமான தோற்றம் மற்றும் சாக்லேட், மாம்பழம், மின்ட் போன்ற மணமுள்ள வகைகளால் சிறார்களை ஈர்க்கும் வகையில் உள்ளன.
2024இல் வாரந்தோறும் 50 இலட்சம் வேப்புகள் குப்பையாகக் கழிக்கப்பட்டன. அவை வருடத்திற்கு 40 தொன் லிதியம் வீணாக்கும் நிலையில் உள்ளது.

இந்த புதிய சட்டம், குழந்தைகளில் வேப்பிங் பழக்கத்தை குறைக்கும் ஒரு முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது.
இருப்பினும், இது மறைமுகமாக கறுப்பு சந்தை வளர்ச்சிக்கு வழிவிடும் என்ற அச்சமும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 18 மணி நேரம் முன்
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri