கருங்கடலில் தாக்கி அழிக்கப்பட்ட ரஷ்ய போர்க்கப்பல்
கருங்கடலில் ரஷ்ய கடற்படையின் போர்க்கப்பலை உக்ரைன் படையினர் தாக்கி அழித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதல் தொடர்பில் உக்ரைன் இராணுவம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் இதனை கூறியுள்ளது.
உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா தனது இராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை ஆரம்பித்தது.
Veni, vidi, vici.@DI_Ukraine released video of the successful strike on the russian landing ship Caesar Kunikov. pic.twitter.com/RPcpDi0Dck
— Defense of Ukraine (@DefenceU) February 14, 2024
அமெரிக்கா உதவி
இந்தப் போரில் உக்ரைன் இராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவிகளை செய்து வருகின்றன.
இந்நிலையில் ரஷ்யாவிடம் போரில் இழந்த சில பகுதிகளை உக்ரைன் இராணுவம் மீட்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்ய இராணுவத்தின் போர்க் கப்பலை அழித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, உக்ரைன் இராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில், ''பிப்ரவரி 14 அன்று உக்ரைன் படையினர் கருங்கடலில் ரஷ்ய கடற்படையின் போர்க்கப்பலை அழித்தனர்'' என தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |