ரஷ்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த உக்ரைன்
ரஷ்யாவின் முன் எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானத்தை உக்ரைன் படைகள் நேற்று சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கி இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் உக்ரைன் படைகள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
ரஷ்யாவின் இராணுவ விடுமுறையின்போது அந்த நாட்டின் ஏ-50 என்ற விமானத்தை வீழ்த்துவதற்கு உதவிய உக்ரைனின் இராணுவ உளவுத்துறைக்கு நன்றி தெரிவிப்பதாக இராணுவ தளபதி மைகோலா ஓலேஷ்சுக் கூறியுள்ளார்.
வான்வழித்தாக்குதல்
இதற்கிடையில், வான்வழித் தாக்குதல் நடப்பதாகவும், தெற்கு துறைமுக நகரமான ஒடேசாவில் உள்ள குடியிருப்பு கட்டடம் தாக்கப்பட்டதாகவும், இதில், 2 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் கூறி வரும் நிலையில், ரஷ்ய இராணுவம் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.
மேலும், ரஷ்ய படை நடத்திய தாக்குதலில், எதிர்பாராதவிதமாக இந்த விமானம் மீது குண்டு விழுந்து விபத்து ஏற்பட்டதாக சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |