டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாய்
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி கடந்த சில மாதங்களாக வலுவடைந்து வருவதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதனால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டியது அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார்.
பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை ரூபாவின் பெறுமதி
இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்தமையின் பலன் மார்ச் முதல் வாரத்தில் இருந்து பொதுமக்களுக்கு கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடின்றி அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்காக விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இறக்குமதியாளர்களுடன் தொடர்ச்சியாகக் கலந்துரையாடியுள்ளதாகவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |