ரஷ்யாவிலிருந்து உடனடியாக வெளியேறுங்கள்! அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு
ரஷ்ய வாழ் அல்லது பயணிக்கும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் வலியுறுத்திள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "அமெரிக்க குடியுரிமைப் பத்திரிக்கையாளரை கைது செய்த ரஷ்யாவின் அறிவிப்பு குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.
வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க குடிமக்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நீங்கள் ரஷ்யாவில் வசிக்கும் அல்லது பயணம் செய்யும் அமெரிக்க குடிமகனாக இருந்தால்.. தயவுசெய்து உடனடியாக வெளியேறுமாறும் ஆண்டனி பிளிங்கன் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கா - ரஷ்யா இடையே முக்கிய மோதல் புள்ளி
இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே முக்கிய மோதல் புள்ளியாக கருதப்படும் என தெரிவிக்கப்டுகின்றது.

ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பைத் தொடங்கியதில் இருந்து இரு வல்லரசு நாடுகளுக்கு இடையேயான உறவில் கசப்பு அதிகரித்து வருகிறது.
இவ்வாறான நிலையில், ஜனாதிபதி ஜோ பைடன் பெப்ரவரி 20, 2023 அன்று உக்ரைனுக்கு திடீர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.உக்ரைனுக்கு ஆதரவளிப்பதை நிறுத்தாவிட்டால் போர் அதிகரிக்கும் என்று அமெரிக்காவை ரஷ்யா மிரட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சன் டிவியிடம் வேண்டுகோள் வைக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள்... என்ன தெரியுமா? Cineulagam
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri