ரஷ்ய போரில் பலியான இலங்கையர் – வெளியான முக்கிய அறிவிப்பு
ரஷ்ய ராணுவத்தில் போரிட்டு உயிரிழந்த இலங்கை நாட்டவரான ரோஹன் குமார் சுடி ((Rohan Kumar Sudi)) என்பவரின் உடலை ரஷ்ய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக, உக்ரைன் ஆதரவு பெற்ற "ஐ வோன்ட் டு லிவ்" (I Want to Live) திட்ட அமைப்பு இன்று அறிவித்துள்ளது.
சர்வதேச மனிதநேய சட்டத்தின்படி, ரோஹன் குமார் சுடி((Rohan Kumar Sudi) ரஷ்ய ராணுவத்தில் ஒரு வீரராகச் செயல்பட்டதால், அவரது உடல் ரஷ்யாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மொஸ்கோவிடம் கோரிக்கை
அவரது உடலை இலங்கைக்குக் கொண்டுவர இலங்கை அரசாங்கம் முறைப்படி மொஸ்கோவிடம் கோரிக்கை விடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய ராணுவத்தில் பணிபுரிந்து உயிரிழக்கும் வெளிநாட்டவர்களின் உடல்களை அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்புவதற்குப் பதிலாக, ரஷ்யாவிலேயே அடக்கம் செய்வது அல்லது தகனம் செய்வதே பொதுவான வழக்கமாக உள்ளது.

இந்தநிலையில், ரஷ்ய ராணுவத்திற்காகப் போரிட்டு உயிரிழந்த 5,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களை தாம் அடையாளம் கண்டுள்ளதாக "ஐ வோன்ட் டு லிவ்" திட்டம் கூறியுள்ளது.
சிலர் போரில் கொல்லப்பட்ட நிலையில், சிலர் உடன் பணியாற்றும் ரஷ்ய வீரர்களாலேயே மரணத்தை தழுவியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையரின் உடல்
உக்ரைனின் கைதிகள் நலன் காக்கும் ஒருங்கிணைப்புத் தலைமையகத்தின் தரவுகளின்படி, ஒக்டோபர் 2026 வரை 151 நாடுகளைச் சேர்ந்த 45,959க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் ரஷ்ய ராணுவத்துடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர்.
ரஷ்யாவினால் பணியமர்த்தப்பட்ட வெளிநாட்டு வீரர்களில் உயிருடன் இருப்பவர்களையும், உயிரிழந்தவர்களின் உடல்களையும் மீட்பதற்கு அந்தந்த நாடுகள் ரஷ்யாவிற்கு அழுத்தம் தர வேண்டும் என உக்ரைன் கோரியுள்ளது.

இதற்கிடையில் இலங்கையரின் உடல் ஒப்படைப்பு நடந்த அதே நாளில், ரஷ்யாவால் அடையாளம் காணப்பட்ட 252 உக்ரைனிய வீரர்களின் உடல்களையும் உக்ரைன் பெற்றுக்கொண்டது.
போராட்ட இடத்திற்கு வந்த ஆயுதமேந்திய இருவர்..! பெலவத்தை அலுவலகத்திற்கு பலாங்கொட கஸ்ஸப தேரர் எச்சரிக்கை
பிரான்சில் வெடித்துள்ளப் போராட்டங்களின் உண்மையானப் பின்னணி: ட்ரம்ப் வைக்கும் குற்றச்சாட்டு News Lankasri
திருமணம் செய்ய ராஷ்மிகா 100 முறை கெஞ்சினார்.. விஜய் தேவரகொண்டா பேச்சை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் Cineulagam