போராட்ட இடத்திற்கு வந்த ஆயுதமேந்திய இருவர்..! பெலவத்தை அலுவலகத்திற்கு பலாங்கொட கஸ்ஸப தேரர் எச்சரிக்கை
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உடனடியாகப் பதவி விலக வேண்டும் அல்லது ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என பலாங்கொட கஸ்ஸப தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கலகொடஅத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்யக் கோரி கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் சத்யாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையிலேயே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கனமழைக்கு மத்தியிலும் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தச் சத்தியாகிரகப் போராட்டத்தின் போது உரையாற்றிய கஸ்ஸப தேரர், அக்டோபர் 21 அன்று ஆயுதமேந்திய இருவர் போராட்டம் நடக்கும் இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினார்.
எச்சரிக்கை
“அவர்கள் எங்களுக்குப் பின்னால் நின்று கொண்டு மிகவும் ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி எங்களை ஏசிப் பேசினார்கள்” என அவர் தெரிவித்தார்.

அத்துடன், அரசாங்கத்தின் அரசியல் தலைமையகமான பெலவத்தையைச் சுட்டிக்காட்டி அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்த அவர் “இந்தப் போராட்டத்தைத் தடுப்பதற்காக வன்முறை மோதல்களை உருவாக்க முயற்சித்தால், அதில் அவர்கள் வெற்றி பெற முடியாது என்பதை பெலவத்தை அலுவலகத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் கூறினார்.
“ஜனாதிபதிக்கு இரண்டே வழிகள்தான் உள்ளன: ஒன்று அவர் தனது பதவியை விட்டு விலகவேண்டும் அல்லது ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்” என பலங்கொட கஸ்ஸப தேரர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
கண்டியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணி
முன்னதாக, ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி கண்டியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணி, அக்டோபர் 15 அன்று ஜனாதிபதி செயலகத்தை அடைந்தது.

இருப்பினும், ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் போராட்டம் நடத்துவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, அக்டோபர் 16 அன்று பிக்குகள் தங்களது போராட்டத்தை விஹாரமகாதேவி பூங்காவிற்கு மாற்றினர்.
கனமழை பெய்து வரும் நிலையிலும், ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கான கோரிக்கை நிறைவேறும் வரை அந்த இடத்தை விட்டு நகரப்போவதில்லை எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகள் கூறி வருகின்றனர்.
திருமணம் செய்ய ராஷ்மிகா 100 முறை கெஞ்சினார்.. விஜய் தேவரகொண்டா பேச்சை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் Cineulagam