வெளியான செம்மணி மனிதப் புதைகுழி! எழுந்துள்ள சர்ச்சைகள் - உண்மை வெளிவருமா..
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாகத் தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் அனுஷா வணிநாயக்க ஆகியோரால் மூன்றாவது இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரை குறைந்தது 574 மனித எலும்பு எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 63 சதவீதமானவை குழந்தைகள் மற்றும் சிசுக்களுடையவை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், உயிரிழப்புகளுக்கான காரணம் குறித்து அறிக்கை இறுதியான முடிவை வழங்கவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவை தொற்றுநோய்கள் அல்லது வேறு காரணங்களால் ஏற்பட்ட மரணங்களா என்பதை உறுதிப்படுத்த மேலதிக அறிவியல் மற்றும் சட்டவைத்திய ஆய்வுகள் அவசியம் என விவாதிக்கப்பட்டுள்ளது.
செம்மணி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களைச் சிலர் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, இராணுவத்தினர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் தவறான முடிவுகளைப் பரப்புகின்றனர்.
மறுபுறம், கண்டறியப்பட்ட மனித எச்சங்கள் காணாமல் போனவர்களுடையதாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள் தொடர்ந்து நிலவுகின்றன.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைப்பதற்காக உண்மைத்தன்மையைக் கண்டறியும் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் இறந்த காவன்திஸ்ஸ யானைக்காக கண்ணீர் விட்டு கதறியவர்களுள் சிலர் செம்மணி புதைகுழியின் விவகாரங்களை பார்த்து சிரிக்கும் நிலையே நாட்டில் உருவாகியுள்ளது.
முழுமையான தகவல்களுக்கு லங்காசிறியின் Newsinsight நிகழ்ச்சியை காண்க...