விஹாரமகாதேவி பூங்கா போராட்டத்தில் கத்திகளுடன் கைதான நபருக்கு பிணை
கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவிற்கு அருகில் அமைந்துள்ள போராட்ட களத்தில், தடைசெய்யப்பட்ட இரண்டு கத்திகளுடன் புதன்கிழமை (ஒக்டோபர் 21) இரவு கைது செய்யப்பட்ட 58 வயதுடைய நபர் தொடர்பான விபரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவின் தகவல்படி, கறுவாத்தோட்டக் காவல் எல்லைக்கு உட்பட்ட போராட்ட களத்தில் கொழும்பு தெற்குப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபருக்கு பிணை
ராகம - கந்தலியத்தபாலுவ பகுதியைச் சேர்ந்த இந்தச் சந்தேகநபர், பிக்குகள் முன்னெடுத்து வரும் இந்தப் போராட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பங்கேற்று வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், போராட்டம் நடைபெறும் இடத்தில் ஏதேனும் குற்றச் செயலைச் செய்வதற்கு இவர் திட்டமிட்டிருந்தாரா என்பது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, 100,000 ரூபாய் சொந்தப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
போரை முடிவுக்கு கொண்டு வர தயார்: உக்ரைன், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா சம்மதம் News Lankasri