பிரித்தானியாவில் வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் வெளியான தகவல்
இந்த வருட ஆரம்பத்தில் பிரித்தானியாவில் வேலைவாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 7 மாதங்களில் முதன்முறையாக இந்த அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பிரித்தானியா, வரி அதிகரிப்பு மற்றும் பொருளாதார ரீதியான சிக்கல்களை எதிர்கொண்ட போதும், வேலை வாய்ப்புகளில் சிறிய முன்னேற்றம் காணப்படுகிறது.
பொருளாதார முன்னேற்றத்துக்கு நம்பிக்கை
'Recruitment & Employment Confederation(REC)' சமீபத்தில் கணக்கெடுத்த அறிக்கை ஒன்றின் படி, பிரித்தானியாவில் மொத்த வேலை வாய்ப்புகள் 1.52 மில்லியனாக உயர்ந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, வேலைவாய்ப்புக்களில் 7.2 சதவீத அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது 2025ஆம் ஆண்டிற்கான பிரித்தானியாவின் பொருளாதார முன்னேற்றத்துக்கு ஒரு சிறிய நம்பிக்கை தருவதாக REC துணை முதன்மை நிர்வாகி கேட் ஷூஸ்மித் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மாஸ் வரவேற்பு பெற்றுள்ள டிராகன் படத்திற்காக பிரதீப் வாங்கிய சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
