விபரீதமாகும் நாமலின் விசாரணை - திணறுகிறதா அநுர அரசாங்கம்..!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நேற்றையதினம்(03.02.2026) முன்னிலையாகி இருந்தார்.
சுமார் 4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் அங்கிருந்து வெளியேறினார்.
தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினரான கெஹெல்பத்தர பத்மே உடனான தொடர்புகள் குறித்த விசாரணைக்காகவே அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நாமல் மீளவும் பதவிக்கு வருவதற்கு முன் நிற்பதாகவும் அநுர அரசாங்கம் அதை எதிர் கொள்வதற்கு முடியாமல் நிற்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவும் கொழும்பு நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்புக்கள் நிகழ்ச்சி...
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 13 மணி நேரம் முன்
சுந்தரி சீரியல் புகழ் நடிகை ஸ்ரீ கோபிகாவிற்கு அழகாக நடந்து முடிந்த சீமந்தம்... போட்டோஸ் இதோ Cineulagam