நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பில் வெளியான தகவல்
மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சி சமூகத்தில் கடுமையான விவாதங்களையும் சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ள நிலையில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக அரசிலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ளப்போவதாக தெரியவந்துள்ளது.
அரசியலமைப்பில் மாற்றம்
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக எதிர்க்கட்சினயினர் தெரிவிக்கின்றனர்.
இந்த அரசியலமைப்புத் திருத்த வரைபை தயாரிக்கும் பணிகள் தற்போது மாகாண ஆளுநராக பதவி வகித்த ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் நடைபெற்று வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது போன்றே எதிர்க்கட்சியினர் தெரிவிக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்திருப்பது.
உயர் நீதிமன்றங்களில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் பல ஓய்வுபெற்ற நீதிபதிகள் இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
உச்சநீதிமன்ற - மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு வயதை நீடிக்கும் முடிவில் அரசாங்கம் தீவிரம்