தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் பல கோடி ரூபா மோசடி அம்பலம்
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் 70 கோடி ரூபாவிற்கும் அதிகமான நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக ,இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் பஸ் உரிமையாளர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
2015ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு வரை வீதி அனுமதிப்பத்திரங்களை (Route Permits) வழங்கும் போதே இந்த நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வீதி அனுமதிப்பத்திரங்களில் நடைபெற்ற மோசடி
அமைச்சரவை அனுமதியோ, சட்டபூர்வமான நடைமுறையோ அல்லது டெண்டர் (Tender) செயல்முறையோ இன்றி 42 வீதி அனுமதிப்பத்திரங்களை (Route Permits) வழங்கியதன் மூலம் இந்த நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இதற்கு மேலதிகமாக, அரசியல்வாதிகளின் தேவைக்கேற்ப அரசியல் தேவைகளுக்காக ஒரு கோடி ரூபாவிற்கு அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
120 மில்லியன் இலஞ்ச வழக்கில் ரணில் தரப்பின் முக்கிய புள்ளி.. தேசபந்துவுக்கு 50 மில்லியன் வழங்க திட்டம்!
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri