பிரித்தானியாவின் சில பகுதிகளில் மோசமான வானிலை: வெளியான எச்சரிக்கை
பிரித்தானியாவின் (United Kingdom) சில பகுதிகளில் இன்று (21) கடுமையான வானிலை நிலவும் என மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக பயண இடையூறுகள் மற்றும் ஆபத்தான சூழ்நிலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கிழக்கு வடக்கு அயர்லாந்து (காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை) மற்றும் தென்மேற்கு ஸ்காட்லாந்து மற்றும் மேற்கு வேல்ஸ் (காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை) பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்.
மஞ்சள் எச்சரிக்கை
குறிப்பாக கடலோரப் பகுதிகளில் இந்த பலத்த காற்று ஆபத்தான சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு ஸ்காட்லாந்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மழைப்பொழிவு பயண இடையூறுகள், மின் தடை மற்றும் வெள்ளப்பெருக்குக்கு வழிவகுக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கிறது.
மேலும், ஸ்காட்லாந்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |