கணவனின் சடலத்திற்காக இரு மனைவிகள் மோதல் - வைத்தியசாலையில் ஏற்பட்ட பரபரப்பு

Kalutara Hospitals in Sri Lanka Death
By Vethu Feb 03, 2026 06:25 AM GMT
Report

கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த ஒருவரின் சடலத்தைப் பொறுப்பேற்பதில் இரு பெண்களுக்கு இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக திடீர் மரண விசாரணை அதிகாரி, தலையீட்டு சட்டப்பூர்வமான முதலாவது மனைவிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.

மீகொட பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய ஓய்வுபெற்ற சுகாதார உதவியாளர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வைத்தியசாலையில் ஏற்பட்ட பரபரப்பு

இவர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைத் திருமணம் செய்திருந்தார். அந்தத் திருமணத்தின் மூலம் இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

கணவனின் சடலத்திற்காக இரு மனைவிகள் மோதல் - வைத்தியசாலையில் ஏற்பட்ட பரபரப்பு | 2 Ladies Fight For Husband S Body

எனினும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் தனது முதல் மனைவியையும் பிள்ளைகளையும் பிரிந்து சென்ற இவர், மீகொட பிரதேசத்தை சேர்ந்த மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்து அவருடன் வசித்து வந்துள்ளார்.

இரண்டாவது பெண்ணின் முதல் திருமணத்தின் மூலம் மூன்று பிள்ளைகள் இருந்தபோதிலும், உயிரிழந்த நபருக்கும் அந்தப் பெண்ணுக்கும் பிள்ளைகள் இல்லை எனக் கூறப்படுகிறது.

மனைவிகள் மோதல்

திடீர் சுகவீனம் காரணமாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், கடந்த 30ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது மரண விசாரணை கடந்த 31ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையில், உயிரிழந்த நபரின் சட்டப்பூர்வமான முதல் மனைவி திருமணச் சான்றிதழுடன் வருகை தந்து சடலத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரினார்.

கணவனின் சடலத்திற்காக இரு மனைவிகள் மோதல் - வைத்தியசாலையில் ஏற்பட்ட பரபரப்பு | 2 Ladies Fight For Husband S Body  

கடந்த 20 வருடங்களாகத் தன்னுடனேயே அவர் வாழ்ந்ததாகக் கூறி, இரண்டாவது மனைவியும் திருமணச் சான்றிதழைச் சமர்ப்பித்து சடலத்திற்கு உரிமை கோரினார். இதனால் வைத்தியசாலை வளாகத்தில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.

இந்தச் சிக்கலான நிலையைத் தணிப்பதற்கு ஹோமாகம திடீர் மரண விசாரணை அதிகாரி தலையிட்டார்.

இரண்டாவது பெண்ணுடன் எவ்வளவு காலம் வாழ்ந்திருந்தாலும், சட்டப்பூர்வமாக முதல் மனைவியிடமிருந்து விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்திருப்பது செல்லுபடியாகாது.

எனவே, சட்டத்தின்படி சடலத்தைப் பொறுப்பேற்க முதல் மனைவிக்கே முன்னுரிமை உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US