அமெரிக்காவில் சிறைக்குள் சிக்கி தவிக்கும் இலங்கையர்கள் - உதவி கோரி கதறல்
அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி மறைந்து வாழ்ந்து வந்த வெளிநாட்டவர்களை அதிரடியாக கைது செய்து அவர்களை நாடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டு வருகின்றார்.
அதற்கமைய இலங்கை, இந்தியா உட்பட பத்து நாடுகளைச் சேர்ந்த 300 குடியேறிகள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளனர்.
குடியேற்றவாசிகளை திருப்பி அனுப்புவதற்காக பனாமா விடுதியில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
குடியேற்றவாசி
அவ்வாறு அடைக்கப்பட்டவர்கள் விடுதியின் ஜன்னல் வழியாக உதவி.. உதவி… என கதறும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்தியா, ஈரான், நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா மற்றும் பிற நாடுகள் உட்பட 10 ஆசிய நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோதிகள் குடியேறிகள் இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உரிய ஆவணங்கள் இன்றி, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரமாக இடம்பெற்று வருவதாக அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே இந்தியா உட்பட பல நாடுகளை சேர்ந்த குடியேறிகள் விலங்குகளுடன் தனி விமானம் மூலம் அந்தந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 9 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

இந்தியாவை 100 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி - இப்போது உரிமையாளரான இந்தியர் News Lankasri
