ட்ரம்பின் அறிவிப்பால் முக்கிய பொருளாதார நாடுகளுக்கு பாரிய சவால்
அமெரிக்க டொலரை அழிக்க முயற்சிக்கும் பிரிக்ஸ் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 150 சதவீத வரி விதிக்கப்படும் என்று அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டொலரை அழிக்க முயற்சித்ததாகவும், புதிய நாணயத்தைப் பயன்படுத்த விரும்புவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.
இதற்கமைய அவர்கள் ஒரு புதிய நாணயத்தைப் பயன்படுத்த விரும்புவது குறித்து எச்சரிப்பதாகவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
150 சதவீத வரி
சீனா உள்ளிட்ட, டொலரை அழிப்பது பற்றி பேசும் அனைத்து பிரிக்ஸ் நாடுகளுக்கும் 150 சதவீத வரிக்கு உட்பட்டதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும். அவர்களின் பொருட்கள் அமெரிக்காவுக்கு வேண்டாம் எனவும், பிரிக்ஸில் உள்ள பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு ராச்சியம் ஆகியவற்றுக்கு தமது எச்சரிக்கை பொருந்தும் என ட்டர்ப் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |