அடுத்த வருடம் பிரித்தானியா செல்லவுள்ளோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்
ஐரோப்பிய கடவுச்சீட்டு (European Passports) வைத்திருப்போர், 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 02ஆம் திகதி முதல் பிரித்தானியாவிற்குள் (UK) நுழைவதற்கு, முன் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, குறித்த திகதியில் இருந்து, மின்னணு பயண அங்கீகாரம் (Electronic Travel Authorization - ETA) என்னும் இலங்கையில் உள்ள நடைமுறையை பிரித்தானியாவும் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐரோப்பிய கடவுச்சீட்டு
அதேவேளை, பிரித்தானியாவிற்குள் நுழைவது மாத்திரமன்றி, அந்நாடு வழியாக வேறொரு நாட்டிற்கு டிரான்ஸிட் மூலம் செல்வதற்கும் முன்னனுமதி பெற வேண்டும்.

இந்நடைமுறையானது, அமெரிக்கா, கனடா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாட்டு பிரஜைகளுக்கு எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி முதல் ஆரம்பமாகின்றது.
இந்நிலையில், இது தொடர்பில் அந்நாட்டின் உத்தியோகபூர்வ இணைய தளங்களில் தகவல்களையும், அனுமதிக்கான விண்ணப்பங்களையும் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri