முதன் முதலில் உலகின் அதிவேக தொடருந்து: வியப்பூட்டும் சீனா
மணிக்கு 450 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் உலகின் அதிவேக தொடருந்தை சீனா(China) அறிமுகம் செய்துள்ளது.
மேம்படுத்தப்பட்ட ‘சிஆா்450’ எனும் இந்த புல்லட் தொடருந்து நவீன தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளதால் பயண நேரம் வெகுவாக குறையும் என சீனா தெரிவித்துள்ளது.
அதிவேக தொடருந்து
இதுகுறித்து சீன தொடருந்து நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

‘சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 450 கி.மீ. வேகத்தில் பயணித்து சிஆா்450 தொடருந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
வேகம், எரிசக்தி பயன்பாடு, உள் இரைச்சல் குறைப்பு, பிரேக் செயல்பாடு உள்ளிட்டவற்றில் உலக அளவில் புதிய தரநிலைகளை இந்த தொடருந்து நிா்ணயித்துள்ளது.
தற்போது செயல்பாட்டில் உள்ள மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் அதிவேக ‘சிஆா்400’ புல்லட் தொடருந்தை விட இதன் வேகம் அதிகமாக உள்ளது.
சீனாவின் முக்கிய நகரம்
சிஆா்450 தொடருந்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் 47,000 கி.மீ. தொலைவுக்கு அதிவேக ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் பெய்ஜிங்-ஷாங்காய் வழித்தடம் வழியே இயக்கப்படும் தொடருந்துகள் மிகவும் லாபகரமானதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam