விடுதலைப் புலிகளின் இலக்கை அடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சி! கம்மன்பில குற்றச்சாட்டு
பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகளால் துப்பாக்கி மூலம் பெற முடியாமல் போனதை, அரசியல் ஆயுதம் மூலம் பெறுவதற்கு இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிப்பதாக புதிய ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மகாநாயக்க தேரர்களை நேற்று சந்தித்து ஆசிபெற்ற வேளையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
சர்வகட்சி மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்றதில் உள்நோக்கம் இருக்கின்றது.
தற்போதைய நெருக்கடி நிலைமையைப் பயன்படுத்தி தமது இலக்கை அடைவதற்கு கூட்டமைப்பினர் முற்படுகின்றனர்.
அதாவது விடுதலைப் புலிகளால் துப்பாக்கி மூலம் பெறமுடியாமல் போனதை, அரசியல் ஆயுதம் மூலம் பெறக் கூட்டமைப்பினர் முற்படுகின்றனர்.
அநுமான் இலங்கையைத் தீயிட்டு அழித்தார் எனக் கூறப்படுகின்றது. அதுபோலவே அசிங்கமான அமெரிக்கரும் தற்போது நாட்டை அழித்து வருகின்றார்.
அரசுக்கான
பெரும்பான்மையை இல்லாது செய்தால் அவர் அமெரிக்கா ஓடிவிடுவார் என குறிப்பிட்டுள்ளார்.