பதவி விலகலை அறிவித்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி அப்துல் வாஸித்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஹித், இன்று (14) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
அவர் தனது பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்னவிடம் முறைப்படி கையளித்துள்ளார்.
அப்துல் வாஹித் செப்டம்பர் 14 ஆம் திகதி முதல் எம்.பி பதவியிலிருந்து விலகியுள்ளதாக பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு கடிதம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல்கள்
இதனைத் தொடர்ந்து, பத்தாவது நாடாளுமன்றத்தில் வெற்றிடம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக பதில் செயலாளர் நாயகம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(5) ஆம் பிரிவின் விதிகளுக்கமைய இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வெற்றிடமாகவுள்ள தேசிய பட்டியல் அமைச்சர் இடத்தை நிரப்ப தேர்தல் ஆணைக்குழு சட்ட விதிகளின்படி தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என தெரிவித்துள்ளது.