13 நாட்களில் 2 ஆயிரத்தை கடந்த டெங்கு நோயாளர்கள் - பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
இலங்கையில் இதுவரையில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் 9 மாதங்களில், 97,637 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு
அத்துடன், இந்த காலபகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 74 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கிடையில், செப்டம்பர் மாதத்தின் தொடங்கிய, 13 நாட்களில் மட்டும் 2,146 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 20,742 நோயாளர்களும், கொழும்பு மாவட்டத்தில் 19,235 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 7,291 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 6,247 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.