கோட்டாபயவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய உறவினர்
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு கொடுத்த துன்ப துயரங்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிச்சயமாக அனுபவிக்க நேரிடும் என ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவரும், ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய உறவினருமான உதயங்க வீரதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில் மகிந்தவிற்காக உதயங்க உருக்கமான பதிவொன்றை இட்டுள்ளார்.
அதில் மேலும்,
வரலாற்றில் எந்தவொரு தலைவரும் செய்யாத வகையில் மகிந்த ஆதரவாளர்களை துரத்தி துரத்தி தாக்கிய ரணிலை பிரதமர் பதவியில் அமரச் செய்ததன் பின்னணியில் இருப்பது மேற்குலக சதியாகும்.

தன்னை ஜனாதிபதி ஆசனத்தில் அமரச் செய்த சகோதரன் உள்ளிட்ட அணியினரை மனிதாபிமானமற்ற சூழ்ச்சியினால் வெளியேற்றிய பாவத்தினை எனது பெரிய அன்னை இன்று உயிருடன் இருந்திருந்தால் ஒரு போதும் அனுமதித்திருக்க மாட்டார்.
அதிகாரம் கைவிட்டு போகும் போது கோட்டாபய அண்ணாவிற்கு இந்த பாவம் நிச்சயமாக புரியும்.

மகிந்த அண்ணாவிற்கு இழைத்த துன்ப துயரங்களுக்கான எதிர்விளைகளை கோட்டாபயவிற்கு விதி நிச்சயமாக வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
பராசக்திக்கு வெளிநாட்டில் குவியும் வசூல்.. எவ்வளவு தெரியுமா? அமரன் படத்தை விட அதிகம் தான் Cineulagam