ரூ.21 மில்லியன் வழக்கில் உதயகம்மன்பிலவுக்கு நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு!
அவுஸ்திரேலிய தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனத்தின் பங்குகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும், ரூ. 21 மில்லியன் மதிப்பிலான குற்றவியல் நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில குறித்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் குற்றமற்றவர் என கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நம்பிக்கை மோசடி
கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி நீண்ட விசாரணைக்குப் பின்னர் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
தீர்ப்பை அறிவித்த நீதிபதி, பிரதிவாதிக்கு எதிராக அரசுத் தரப்பால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.

அதன்படி, பிரதிவாதியை குற்றமற்றவர் என விடுவித்து விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டது.
அவுஸ்திரேலிய தொழிலதிபர் பிரையன் ஷாடிக் என்பவருக்குச் சொந்தமான நிறுவனத்தின் பங்குகளை, போலி வழக்கறிஞர் உரிமத்தைப் பயன்படுத்தி விற்பனை செய்ததன் மூலம் ரூ. 21 மில்லியன் மதிப்பிலான குற்றவியல் நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தி, நல்லாட்சி அரசாங்கத்தின் போது உதய கம்மன்பில மீது இந்த வழக்குத் தொடரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தத்தின் மூலம் இராணுவத்துக்குப் பொலிஸாரின் அதிகாரங்கள்! மொட்டு தரப்பு கடும் கண்டனம்
You may like this..
நேபாளப் பெருவெள்ளம்: ஒரு மாதமாகியும் உறவினர்கள் குறித்து எதுவும் தெரியாததால் சோகத்தில் கனேடிய குடும்பங்கள் News Lankasri
லொட்டரியில் விழுந்த ரூ.8,700 கோடி ஜாக்பாட் - ஒரு மாதம் கழித்து பரிசை வாங்கிய வெற்றியாளர் News Lankasri
பிரபல தொகுப்பாளினியை காதலிக்கும் லப்பர் பந்து புகழ் நடிகர் தினேஷ்... வெளிவந்த ஜோடியின் போட்டோஸ்... Cineulagam
இனி நாங்கதான் நார்மல்.. எல்லாரும் தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க: டோரதி சர்ச்சைக்கு கார்த்திக் சுப்புராஜ் பதில் Cineulagam