வெறும் 133 நாட்கள் மட்டுமே..! உயர்தர பரீட்சை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lanka Politician Sri Lankan Peoples G.C.E.(A/L) Examination Sri Lanka Government Udaya Gammanpila
By Rakesh Jun 16, 2026 05:44 AM GMT
Report

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள உயர்தரப் பரீட்சையை, மாணவர்களின் நலன் கருதி கல்வி அமைச்சு உடனடியாக ஒத்திவைக்க வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

அவ்வாறு தவறும் பட்சத்தில் மாணவர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

எதுல்கோட்டேயிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று(15.06.2026) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சான்றுகள்

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

இலங்கையில் 500 ஆண்டுகளுக்கும் மேலாகப் பௌத்தர்களும் கத்தோலிக்கர்களும் மிகுந்த நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறான பின்னணியில், பௌத்த - கத்தோலிக்க ஒற்றுமையைத் தகர்த்துச் சிங்கள சமூகத்தைப் பலவீனப்படுத்தும் நுட்பமான சதியொன்று அரங்கேறி வருகின்றது.

கத்தோலிக்கத் திருச்சபைக்குள் ஆதிக்கம் செலுத்தும் சில மதகுருமார்களைக் கொண்ட என்.ஜி.ஓ. கும்பலே இதற்குத் தலைமையேற்கின்றது.

வெறும் 133 நாட்கள் மட்டுமே..! உயர்தர பரீட்சை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Udaya Gammanpila S Allegations Al Examination

ஈஸ்டர் தாக்குதலின் பொறுப்பிலிருந்து முஸ்லிம் தீவிரவாதிகளை முழுமையாக விடுவித்து, அதனைப் பௌத்தர்கள் மீது திட்டமிட்டுச் சுமத்துவதே இவர்களின் பிரதான நோக்கமாகும். இதற்காகவே அசாத் மௌலானா போன்றோரின் பொய் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு, பேராயர் கர்தினாலும் செயற்பட்டு வருகின்றாரா என்ற பலத்த கேள்வி எழுகின்றது.

மறுபுறம், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு ஈஸ்டர் தாக்குதலின் முக்கிய சாட்சியான இப்ராஹிம் நானாவின் வீட்டுப் பணிப்பெண்ணை மர்மமான முறையில் வெளிநாடு செல்ல அனுமதித்துள்ளது.

இதன் மூலம், இப்ராஹிம் நானா சட்டப் பிடியிலிருந்து விடுதலையாவதற்கும், அவரது முடக்கப்பட்ட சொத்துக்கள் மீண்டும் அவருக்கே கிடைப்பதற்கும் இந்த அரசு மறைமுகமாக வழிவகை செய்துள்ளது.

2026ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி நடத்துவதற்கு அரசு எடுத்துள்ள முடிவானது மாணவர்களின் அடிப்படை உரிமைகளைக் கடுமையாக மீறும் செயலாகும். கடந்த பரீட்சைப் பெறுபேறுகள் மார்ச் 31 அன்றே வெளியானதால், இரண்டாம் மற்றும் மூன்றாம் முறை பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இம்முறை தயாராவதற்கு வெறும் 133 நாள்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

கடந்த 2024 இல் 178 நாள்களும், 2025 இல் 198 நாள்களும் அவகாசம் வழங்கப்பட்டிருந்த பின்னணியில் இம்முறை வழங்கப்பட்டுள்ள காலம் பெரும் அநீதியாகும்.

உயர்தர பரீட்சை ஒத்திவைப்பு

அதேபோன்று, முதலாம் முறை பரீட்சை எழுதும் மாணவர்களுக்கும் கடந்த காலங்களில் 27 முதல் 32 மாதங்கள் வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த போதிலும், இம்முறை வெறும் 21 மாதங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

வெறும் 133 நாட்கள் மட்டுமே..! உயர்தர பரீட்சை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Udaya Gammanpila S Allegations Al Examination

'டித்வா' புயல் அனர்த்தம், ஆசிரியர் வேலைநிறுத்தம் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் புத்தகங்கள் மற்றும் உடமைகளை இழந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்த மாணவர்களுக்கு இழைக்கப்படும் இந்த அநீதியானது, அரசமைப்பின் 12(1) பிரிவின் கீழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ள “அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும்” என்ற விதியை நேரடியாக மீறுகின்றது.

கடந்த 2022 இலும் இதேபோன்றதொரு சவாலான சூழல் ஏற்பட்ட போது, அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் சட்டபூர்வ நியாயங்களை ஏற்றுக்கொண்டு பரீட்சையை ஒத்திவைத்தனர்.

தற்போதைய திசைகாட்டி அரசும் அரசியல் பிடிவாதங்களை விடுத்து, மாணவர்களின் எதிர்காலம் கருதி மனிதாபிமானத்துடன் பரீட்சையை ஒத்திவைக்க முன்வர வேண்டும் என்றார். 

கண்டி மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள விசேட எச்சரிக்கை..!

கண்டி மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள விசேட எச்சரிக்கை..!

கொழும்பில் இருந்து சென்ற பேருந்தில் ஏற்பட்ட அனர்த்தம் - 40 உயிர்களை காப்பாற்றிய சாரதி

கொழும்பில் இருந்து சென்ற பேருந்தில் ஏற்பட்ட அனர்த்தம் - 40 உயிர்களை காப்பாற்றிய சாரதி

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US