இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று காலை (16) 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதன் மையப்புள்ளி, பாலு நகருக்குத் தென்கிழக்கே சுமார் 42 கி.மீ தொலைவில், 10 கி.மீ ஆழத்தில் பதிவாகிவுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
சுனாமி ஏற்படும் அபாயம்
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் எதுவும் இல்லை என இந்தோனேசியாவின் புவி இயற்பியல் நிறுவனம் அறிவித்துள்ளது.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர்சேதம் அல்லது பொருட்சேதம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
16,000 பேர் கடுமையான அதிர்வையும், 165,000 பேர் மிக கடுமையான அதிர்வையும், 574,000 பேர் வலுவான அதிர்வையும், 676,000 பேர் மிதமான அதிர்வையும், 3.2 மில்லியன் பேர் லேசான அதிர்வையும் உணர்ந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நில அதிர்வு தொடர்பாக மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.