சீனாவை அச்சுறுத்தும் டொல்பின் சூறாவளி: ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து
சீனாவின் கிழக்குக் கரையை 'டொல்பின்' சூறாவளி தாக்கவுள்ள நிலையில், அங்கு 1,600க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஐந்து இலட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சூறாவளியின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, நாட்டின் தேசிய வானிலை மையம் ஞாயிற்றுக்கிழமை காலையில் மிகக் கடுமையான 'சிவப்பு எச்சரிக்கை' அறிவிப்பை விடுத்துள்ளது.
அதிக மக்கள் தொகை கொண்ட கிழக்குக் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்பதால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட ஹெலிகொப்டர் வீழ்ந்து விபத்து - இருவர் பலி
விமானச் சேவை இரத்து
சீனாவின் ஷங்காய் நகரின் முக்கிய விமான நிலையங்களில் 1,400க்கும் மேற்பட்ட விமானச் சேவைகளும், ஹொங்சோ விமான நிலையத்தில் 270க்கும் மேற்பட்ட விமானச் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், ஜெஜியாங் மற்றும் ஃபூஜியான் மாகாணங்களில் 200க்கும் மேற்பட்ட படகுச் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜெஜியாங் மாகாணத்தின் தாய்சோ நகரில் இருந்து சுமார் 3,90000 மக்களும், ஷங்காய் மற்றும் ஃபூஜியான் மாகாணங்களின் ஆபத்தான பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சூறாவளி ஞாயிற்றுக்கிழமை இரவு அல்லது திங்கட்கிழமையளவில் மணிக்கு 162 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் பலத்த காற்றுடன் சீனக் கரையை அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.