டெங்கு நோய் தீவிரமடைந்துள்ள பின்னணி! அடையாளப்படுத்தப்பட்டுள்ள அதிஅபாய வலயங்கள்
நாட்டில் டெங்கு நோய் தீவிரமடைந்துள்ள பின்னணியில் 119 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் டெங்கு அதி அபாய வலயங்களாக சுகாதார பிரிவினரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 89,033 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.
டெங்கு நோயாளர்கள் பதிவு
இதற்கமைய, 64 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மொத்த நோயாளர்களில் 52.94 சதவீதமானோர் 47,136 நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதன்படி, மாவட்ட மட்டத்தில் கம்பஹா மாவட்டம் அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ளதுடன், அங்கு 18,922 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 17,679 நோயாளர்களும் கண்டி மாவட்டத்தில் 6,298 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக, கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் மட்டும் 3,569 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்
அத்துடன், கடந்த ஜூலை மாதத்தில் 29,973 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், ஆகஸ்ட் மாதத்தின் முதல் 7 நாட்களில் மட்டும் 3,686 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அச்சத்தில் நாட்டிலிருந்து அவசரமாக தப்பியோடும் அரசியல்வாதி மற்றும் உயர் அதிகாரிகள் - ஆதாரங்களுடன் நெருங்கும் புலனாய்வாளர்கள்
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan