பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது
அம்பலாங்கொட - கஹாவ சந்திப் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தி ஒருவரை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இரு சந்தேகநபர்கள் மீட்டியகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
19 மற்றும் 22 வயதுடைய சந்தேகநபர்கள் நேற்று (24) காலை படபொல பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடத்த முயற்சி
இவர்கள் கடந்த 21ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச்சூடு நடத்த முயன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கைத்துப்பாக்கி, 10 தோட்டாக்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் சந்தேகநபர்கள் பயன்படுத்திய இரண்டு தலைக்கவசங்கள் ஆகியனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக அம்பலாங்கொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
கொழும்பு செட்டியார் தெருவில் ஏற்பட்ட அமைதியின்மை! நகை வியாபாரியை அடித்து இழுத்துசென்ற பொலிஸாரால் ஏற்பட்ட குழப்பம்
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட லட்சுமி ப்ரியா! அதிர்ச்சியிக் ரசிகர்கள் Manithan