கொழும்பு செட்டியார் தெருவில் ஏற்பட்ட அமைதியின்மை! நகை வியாபாரியை அடித்து இழுத்துசென்ற பொலிஸாரால் ஏற்பட்ட குழப்பம்
கொழும்பு செட்டியார் தெருவில் பொலிஸார் இருவர் நகைக்கடை உரிமையாளரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கொழும்பு மத்திய பொலிஸ் அத்தியட்சகரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார்.
செட்டியார் தெருவில் தங்க நகைக்கடை உரிமையாளர் ஒருவர் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அப்பகுதியில் நேற்று (24) பிற்பகல் பெரும் பதற்றமும் அமைதியின்மையும் ஏற்பட்டது.
தங்க நகை திருட்டு
தங்க நகை திருட்டு சம்பவமொன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை முச்சக்கர வண்டியொன்றில் அழைத்து வந்த பொலிஸார், அவர் காட்டிய நபரை கொண்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர் அங்கிருந்த நபரை பொய்யாக அடையாளம் காட்டிய நிலையில், பொலிஸார் குறித்த நபரை தாக்கி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்ல முயன்ற போது பெரும் பதற்றம் நிலவியுள்ளது.
எனினும், பாதிக்கப்பட்ட நபர், சம்பவம் இடம்பெற்ற கடைக்கு கொடுக்கல் வாங்கல் அலுவல் தொடர்பாக சென்ற போது அங்கு வந்திருந்த நபருக்கு சிங்கள மொழி பேச தெரியாது என்று கூறியுதால் அவருக்கு உதவியதாகவும் விளக்கமளித்துள்ளார்.
இதன்போது பொலிஸார் தன்னை காயம் ஏற்படும் வகையில் கடுமையாக தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட நபர் குறிப்பிட்டார்.
விசாரணைகள் ஆரம்பம்
நகைக்கடை உரிமையாளரை பொலிஸார் பலவந்தமாக தாக்கி அழைத்துச்செல்ல முயன்ற சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கமராக்களிலும் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து நகைக்கடை வர்த்தகர்கள் பொலிஸாரை சுற்றிவளைத்த நிலையில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியிருந்தது.
சம்பவத்தையடுத்து செட்டியார் தெருவிலுள்ள பல நகைக்கடைகள் தற்காலிகமாக அடைக்கப்பட்டதுடன், மேலதிக பொலிஸ் குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கொழும்பு மத்திய பொலிஸ் அத்தியட்சகரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார்.
சரவணன் பற்றி அஞ்சலிக்கு தெரிய வந்த உண்மை, இனி நடக்கப்போவது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam