இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட சோதனை - வசமாக சிக்கிய இரு சந்தேகநபர்கள்
அம்பாறையில் போதைப்பொருட்களை நீண்டகாலமாக பாடசாலை மாணவர்களுக்கு விநியோகித்து வந்த இரு சந்தேகநபர்களிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கல்முனை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புறநகர் பகுதியில் இன்று (25) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது சந்தேகநபர்கள் சிக்கியுள்ளனர்.
சந்தேகநபர்கள் கைது
சம்பவம் தொடர்பில் 33 மற்றும் 34 வயதுடைய மருதமுனை பகுதியை சேர்ந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் வசமிருந்து மொத்தமாக 1,690 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் கைதான சந்தேகநபர்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்டநடவடிக்கைக்காக பெரிய நீலாவணை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.




பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் துணையாக இருப்பேன்..ஆனால் மோடி இருந்தால்தான் - ட்ரம்ப் News Lankasri