அதிபர் - ஆசிரியர் சம்பள உயர்வு குறித்து வெளியான முக்கிய தகவல்
பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் மிக உயர்ந்த 10 தரங்களுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (25) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர்களின் சம்பளம்
மேலும் விளக்கமளித்த அவர், இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
சம்பள உயர்வுடன், சம்பள தரங்களில் 07ஆவது இடம் பாடசாலை அதிபர்களுக்கும், 08வது இடம் ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களின் சம்பளத்தை மிக உயர்ந்த 10 தரங்களுக்குள் கொண்டுவருவதாக வாக்குறுதி அளித்திருந்தாலும், அது நிறைவேற்றப்படவில்லை என சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சிறப்பு கவனம்
ஆனால் அது அப்படியல்ல. பாடசாலை அதிபர்களின் சம்பளம் 30,105 ரூபாயாலும், ஆசிரியர்களின் சம்பளம் 25,360 ரூபாயாலும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, சம்பள தரங்களில் 07ஆவது இடம் பாடசாலை அதிபர்களுக்கும், 08வது இடம் ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், முன்பள்ளி கல்வியிலிருந்து பல்கலைக்கழக கல்வி வரையிலான கல்வி மேம்பாட்டிற்காக கூடுதலாக 6,019 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
சமூக பாதுகாப்பிற்காகவும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கனடாவின் புதியா விசா விதிகள்... இந்தியர்கள் உட்பட கடும் சிக்கலில் வெளிநாட்டு மாணவர்கள் News Lankasri

95 நாடுகள் ஆதரவு, 18 நாடுகள் எதிர்ப்பு: உக்ரைன் போர் தொடர்பில் நிறைவேற்றப்பட்ட ஐ.நா தீர்மானம் News Lankasri

22 வயதில்.., பயிற்சியில்லாமல் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் வெற்றி பெற்ற ஐஏஎஸ் அதிகாரி News Lankasri

Rasipalan: இன்னும் 2 நாட்களில் நடக்கும் சனி பெயர்ச்சி- துரதிஷ்ட வலையில் சிக்கப்போகும் ராசிகள் Manithan
