தூய்மையான இலங்கை திட்டம் : பரீட்சார்த்த முன்னோடி நடவடிக்கைகள் ஆரம்பம்
தூய்மையான இலங்கை திட்டத்திற்கு இணங்க, விபத்துகளைக் குறைப்பதற்கும் நெரிசலைக் குறைப்பதற்கும் இலங்கையின் பொலிஸார் இரண்டு போக்குவரத்து முயற்சிகளை ஆரம்பித்துள்ளனர்.
இதில் முதல் முயற்சியாக, மாற்றியமைக்கப்பட்ட ரிங்டோன்கள், பல்வேறு வண்ணங்களில் ஒளிரும் விளக்குகள், சட்டவிரோத மாற்றங்கள், அதிக சத்தமிடும் ஹோர்ன்கள், சத்தமிடும் சைலன்சர்கள் மற்றும் விபத்து அபாயத்தை அதிகரிக்கும் கூடுதல் பாகங்கள் ஆகியவற்றைக் கொண்ட வாகனங்களை இலக்காகக் கொண்டதாகும்.
மாற்றங்களை அகற்ற அறிவுறுத்துதல்
இரண்டாவது முயற்சியாக,பொதுப் போக்குவரத்து பேருந்து ஓட்டுநர்களின் போக்குவரத்து மீறல்களைக் கண்டறிந்து அதற்கேற்ப சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சாதாரண உடையில் உள்ள அதிகாரிகளைப் பணியமர்த்துவதாகும்.
ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இந்த திட்டங்கள் இரண்டும், நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன
இவை, ஜனவரி 19 வரை முன்னோடித் திட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதல் நடவடிக்கையின் போது, அதிகாரிகள், வாகன ஓட்டுநர்களுக்கு கல்வி கற்பித்தல், எச்சரிக்கைகளை வழங்குதல் மற்றும் அவர்களின் வாகனங்களில் இருந்து அங்கீகரிக்கப்படாத மாற்றங்களை அகற்ற அறிவுறுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri
