சம்பளம் இல்லாத விடுமுறை: அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு
அரசாங்க ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விடுமுறையை பெற்றுக்கொள்வது தொடர்பில் விசேட அறிவுறுத்தல் வழக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆகிய அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செயலாளர்கள் பின்பற்ற வேண்டிய தொடர் அறிவுறுத்தல்கள் தொடர்பில் இதில் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைகேடுகள்
2022 ஜூன் 22இல் திகதியிடப்பட்ட பொது நிர்வாக சுற்றறிக்கையில், சம்பளமின்றி விடுமுறை வழங்குவதில் முறைகேடுகள் இருந்ததாக குறிப்பிடப்படும் நிலையில், அவற்றை தவிர்ப்பதற்காக குறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்க ஊழியர்கள் சிலர் 5 வருடங்கள் உள்நாட்டில் விடுமுறையை விண்ணப்பித்து விட்டு, விடுமுறையை இரத்து செய்யாமல் வெளிநாட்டு விடுமுறைக்கு விண்ணப்பித்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், இவ்வாறான விடுமுறைகளை அங்கீகரிக்கும் முன்னர் அது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானிக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விடுமுறைக்கு விண்ணப்பிக்கும் அரசாங்க ஊழியர்கள், முன்னர் எடுத்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுமுறைகளை சரிபார்த்து, அட்டையில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

சூப்பர் சிங்கர் போட்டியாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் ஆண்டனி... சந்தோஷத்தில் போட்டியாளர், வீடியோ Cineulagam
