ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட திடீர் சோதனை - போதைப்பொருளுடன் சிக்கிய இருவர்
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்றாசி நகரத்தில் உணவகம் ஒன்றில் ஐஸ் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இரண்டு இளைஞர்களை பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று(07.06.2026) இரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இருவர் கைது
அக்கரப்பத்தனை பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இணைந்து தீடிரென குறித்த உணவகத்தினை முற்றுகை இட்டு பரிசோதனை மேற்கொண்டயில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 430 மில்லிகிராம் மற்றும் 110 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் அடங்கிய இரண்டு பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், சம்பவத்தில் கைதானவர்கள், 33 மற்றும் 35 வயதுடையவர்கள் என்றும் சந்தேக நபர்கள் இருவரும் அக்கரப்பத்தனை மற்றும் டிக்கோயா பகுதிகளை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இலங்கையில் ஒரு பவுண் தங்கத்துக்கு பெருந்தொகை வரி! நகை வாங்க காத்திருப்போருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri