இலங்கையில் ஒரு பவுண் தங்கத்துக்கு பெருந்தொகை வரி! நகை வாங்க காத்திருப்போருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்
இலங்கையில் ஒரு பவுண் தங்கத்துக்கு அரசாங்கத்தினால் சுமார் 82 ஆயிரம் ரூபா வரி விதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
தற்போது ஒரு பவுன் தங்கத்தின் உண்மையான தங்க மதிப்பு சுமார் 358,700 ரூபாவாகும். ஆயினும் ஒரு பவுன் தங்கத்தின் விலை தற்போது 400,000 ரூபாயைத் தாண்டியுள்ளது.
நுகர்வோரால் செலுத்தப்படும் இறுதி விலை
இந்நிலையில் தங்க நகை கொள்வனவின் போது நுகர்வோரால் செலுத்தப்படும் இறுதி விலையில் சுமார் 82,00 ரூபாய் அளவில் வரிகள் மட்டுமே உள்ளடங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் செய்கூலி மற்றும் அதனுடன் தொடர்புடைய செலவுகளை உள்ளடக்கியே தங்க நகைககளின் இறுதி விலையை தீர்மானிக்கப்படுகின்றது.
தங்க நகை வர்த்தகர்களின் கருத்துப்படி, தற்போதைய வரி முறையானது தங்கத்தின் மதிப்பு மற்றும் செய்கூலி (கூலி) ஆகிய இரண்டிற்கும் 18 சதவீத பெறுமதி சேர்க்கப்பட்ட வரியையும் (VAT), அதனுடன் கூடுதலாக 2.5 சதவீத சமூகப் பாதுகாப்புப் பங்களிப்பு வரியையும் (SSCL) விதிக்கின்றது.
இந்த வரிகள் தங்க நகைகளின் சில்லறை விலையை கணிசமாக உயர்த்தியுள்ளதால், விற்பனையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நகை வியாபாரிகள் விடுத்துள்ள அவசர கோரிக்கை
எனவே தங்கம் மீதான வரி அமைப்பை உடனடியாக மாற்றியமைக்குமாறு கொழும்பு, புறக்கோட்டைப் பகுதியிலுள்ள நகை வியாபாரிகள் அரசாங்கத்திடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகப்படியான வரிவிதிப்பு காரணமாக நகைகளின் விலைகள் சாதாரண நுகர்வோரின் கைக்கு எட்டாத அளவிற்கு உயர்ந்துள்ளதோடு, உள்ளூர் நகைத்தொழில் கிட்டத்தட்ட 75 சதவீதத்தால் சுருங்கிப் போயுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வட் (VAT) வரி அமைப்பில் திருத்தம் செய்வது நுகர்வோர் மற்றும் திறைசேரி (TREASURY) ஆகிய இரு தரப்பினருக்கும் பயனளிக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
நிதி அமைச்சின் வசம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவொன்றில், தங்கத்தின் மதிப்பு மீதான வட் வரியை நீக்கிவிட்டு, அதனைச் செய்கூலிக்கு (Labor Charge) மாத்திரம் விதிக்குமாறும், அதேநேரம் நடைமுறையிலுள்ள சமூகப் பாதுகாப்பு வரியைத் தக்கவைத்துக் கொள்ளுமாறும் நகை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரானுக்கு மரண அடி உறுதி... பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு கொந்தளித்த இஸ்ரேல் News Lankasri
அந்த கடையை கொண்டுபோய் சுடுகாடு பக்கத்துல வைங்க.. CM விஜய்க்கு நடிகர் பார்த்திபன் கொடுத்த ஐடியா Cineulagam
பூசத்தில் குரு பெயர்ச்சி ... அடுத்த 6 மாதங்கள் இந்த ராசியினரின் நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி! Manithan