கொடூரமான முறையில் எரித்து கொலை செய்யப்பட்ட தாய் - கணவனின் வெறிச்செயல்
மொனராகலை, கொடிகமுவ முஸ்லிம் கிராமத்தில் வசிக்கும் 4 பிள்ளைகளின் தாய் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று அதிகாலை பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட நிலையில் பியகம ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பிபில, கொடிகமுவ முஸ்லிம் கிராமத்தைச் சேர்ந்த ரினோஷா உம்மா என்ற நான்கு பிள்ளைகளின் தாயாராவார்.
தாய் மரணம்
அவர் தனது பிள்ளைகள் மற்றும் கணவனுடன் இரவு உணவின் பின் உறங்கச் சென்றுள்ளார். பிள்ளைகள் தனி அறையொன்றில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

இந்தநிலையில், அதிகாலையில் அறையில் தீப்பிழம்பு எரிவதைக் கண்டு பிள்ளைகள் கதவைத் திறந்து பார்த்த போது, தாய் தீப்பற்றி எரிவதைக் கண்டுள்ளனர்.
உடனடியாக தீயை அணைத்து, அவரை பிபில ஆதார மருத்துவமனையில் அனுமதித்த போதிலும் அவர் உயிரிழந்துள்ளார்.
கோழி இறைச்சிக் கடை
அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் கணவர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பியோடி தலைமறைவாகியுள்ளார்.

அவர் கோழி இறைச்சிக் கடையொன்றை நடத்தி வரும் ஒரு வர்த்தகர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதாலேயே இந்தக்கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அந்த கடையை கொண்டுபோய் சுடுகாடு பக்கத்துல வைங்க.. CM விஜய்க்கு நடிகர் பார்த்திபன் கொடுத்த ஐடியா Cineulagam
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri