திருகோணமலையில் மோட்டார் வாகனமொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்து
திருகோணமலை - ஹொரவ்பொத்தானை பிரதான வீதி பன்குளம் பகுதியில் மோட்டார் வாகனமொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதில் அதில் பயணித்து இருவர் காயமடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது.
குறித்த விபத்து இன்று (29) மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த மோட்டார் வாகனம் பன்குளம் பிரதேசத்தில் உள்ள வளைவு ஒன்றில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து உள்ளரங்க வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாகவும், அதில் பயணித்த இருவரும் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை,குறித்த மோட்டார் வாகனj்தில் பயணித்தவர்கள் மதுபோதையிலிருந்ததாகவும், அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் 23 மற்றும் 25 வயதுடையவர்கள் காயமடைந்துள்ளதாகவும், விபத்து தொடர்பில்
மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



திருமணம் ஆகாமல் கருவுற்றால் அபராதம்! மணமுடிக்காமல் ஒன்றாக வாழ்ந்தால் 70 டொலர்..எங்கு தெரியுமா? News Lankasri
கட்டுப்பாடு விதித்த ஐரோப்பா... எரிவாயு ஏற்றுமதியை இந்த நாடுகளுக்கு இருமடங்காக அதிகரித்த ரஷ்யா News Lankasri