யாழில் விபத்து: இருவர் படுகாயம்
யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தானது நேற்று (05.01.2024) மாலை மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லூண்டாய் வீதி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் ஆணொருவரும் சிறுமி ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த கப் ரக வாகனம், கல்லூண்டாய் வைரவர் கோவிலில் இருந்து சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த சிறுமியும் ஆணொருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
மேலும், விபத்தினை ஏற்படுத்திய வாகன சாரதியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri
