சுவிட்ஸர்லாந்தில் அதிகரிக்கும் பணியாளர் வெற்றிடங்கள்
சுவிட்ஸர்லாந்து நாட்டில் பல்வேறு துறைகளில் பணியாளர் வெற்றிடங்கள் நிலவுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனடிப்படையில் அந்நாட்டில் 10000ற்கும் மேற்பட்ட பணியாளர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
பணியிட வெற்றிடங்கள்
சுவிட்ஸர்லாந்தில், மருத்துவத்துறையில் மாத்திரம் 15,790 பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளன. குறிப்பாக, செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவப் பணியாளர்களுக்கான தேவை அதிகம் காணப்படுகிறது.
அதற்கு அடுத்தபடியாக, கட்டுமானத் துறையில் 13,566 பணியிடங்கள் உள்ளன. சில்லறை வர்த்தகம் மூன்றாவது இடத்திலுள்ளது.

அத்துறையில் 12,761 பணியிடங்கள் உள்ளன. அதைத் தொடர்ந்து, உணவகங்கள் மற்றும் விருந்தக துறையில் 10,478 பணியிடங்கள் காணபடுகின்றன.
இந்நிலையில் அந்நாட்டின் சூரிச் மாகாணத்தில் 55,113 பணியிடங்களும், Bern மாகாணத்தில் 37,939 பணியிடங்களும் வெற்றிடமாக உள்ளன.
அதற்கு அடுத்தபடியாக Aargau மாகாணத்தில் 20,350 பணியிடங்களும், அதைத் தொடர்ந்து Gallen மாகாணத்தில் 18,178 பணியிடங்களும், Lucerne மாகாணத்தில் 17,021 பணியிடங்களும் காணப்படுகின்றன.
400,000 பணியிடங்கள்
இதன்படி 2025இல் ஏராளமானோர் பணி ஓய்வு பெற இருப்பதால், 340,000 பணியிட வெற்றிடங்கள் உருவாகக்கூடும்.

ஆண்டொன்றிற்கு 50,000 திறன்மிகுப் பணியாளர்கள் புலம்பெயர்தல் மூலம் சுவிட்ஸர்லாந்துக்கு பணிகளுக்காக வருகைதந்தாலும், 2030ஆம் ஆண்டளவில், சுமார் 400,000 பணியிடங்கள் உருவாகக்கூடிய நிலை காணப்படுவதாக ஆய்வமைப்பு ஒன்றின் அறிக்கை கூறுகிறது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        