மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் பாரிய விபத்து: இருவர் படுகாயம்
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் பெரிய கல்லாற்றில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன், மகிழுந்து மற்றும் ஸ்ரீலங்கா ரெலிகொம் கம்பத்திற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற இவ்விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழுப்பிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த மகிழுந்து களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குப்பட்ட பெரியகல்லாற்றில் வைத்து அருகிலிருந்த ஸ்ரீலங்கா தொலைத் தொடர்புக்குச் சொந்தமான கம்பத்தில் மோதியதனாலேயே இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.
இதில் பயணித்த இருவரும் தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளதுடன், எனினும் அவர்கள் இருவரும் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு காயமடைந்த இருவரும் வைத்தியர்களான தம்பதிகளாவர்.
இவ்விபத்துச் சம்பவத்தில் மகிழுந்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், இலங்கை தொலைத் தொடர்பு கம்பத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த
களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.






சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri
