முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கு மரண தண்டனை
2005 ஆம் ஆண்டு பேலியகொட பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரை தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டின் இரண்டு முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
18 வருடங்களாக நீடித்து வந்த வழக்கு விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று (04.03.2024) இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம், பொலிஸ் கைரேகைப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் கையடக்கத் தொலைபேசியைத் திருடியதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் பேலியகொட பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த நபர் ஒருவர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் 52 வயதுடைய சந்தேக நபரை சட்டவிரோதமாக தடுத்து வைத்து கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்த குற்றத்திற்காக பேலியகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் பாதிக்கப்பட்டவரின் மகளுக்கு தலா 1 மில்லியன் ரூபாய்களை செலுத்தவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, வழக்கின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரதிவாதிகளை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.
you may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |