கடற்கரையில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவி: விசாரணையில் சிக்கிய காதலன்
பிரபல பாடசாலை ஒன்றின் 17 வயதுடைய மாணவி ஒருவரும் அவரது 30 வயதுடைய காதலனும் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு இன்று (04) கிடைத்த இரகசியத் தகவலையடுத்து வாத்துவ,பொஹத்தரமுல்ல கடற்கரையில் 20 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வாத்துவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் விசாரணை
இதன்போது மாணவியிடம் நடத்திய விசாரணையில், ஹொரணையில் உள்ள தனியார் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது காதலன் மது அருந்த வைத்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சந்தேகநபர்கள் இருவரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களா என உறுதிப்படுத்த சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri