கிளிநொச்சியில் அதிகரித்துள்ள காட்டு யானைகளின் அட்டகாசம்
கிளிநொச்சி அக்கராயன் பிரதேசத்தின் எல்லையோர கிராமமான கெங்காதரன் குடியிருப்பு பகுதியில் யானைகள் புகுந்து தென்னைகளையும், பயிர்களையும் அழித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மிகுந்த சிரமங்களின் மத்தியில் வளர்க்கப்பட்ட தமது வாழ்வாதாரம் இடை நடுவில் சீரழிக்கப்பட்டதை கிராமத்தவர் மிகுந்த வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
வாழ்வாதாரம் பாதிப்பு
மேலும், இன்று
இச்சம்பவம் நாளை நமக்கானதாக மாறும் இது உயிர் சேதம் வரை தொடரலாம் எனும்
ஏக்கத்துடன் தமது இரவை கழிக்கின்றோம் எனவும் ஆதங்கப்பட்டுள்ளனர்.
கிராமத்து இளைஞர்கள் வனவள திணைக்களத்தினர் யானை வெடிகளுடன் கட்டின் எல்லையோரத்தில் விழித்திருக்க கிராமத்தின் முதலாவது காணியில் தனது கைவரிசையை காட்டிச்சென்றமை மிகுந்த பயத்தை ஏற்படுத்துவதாகவும் தமது பகுதியிலுள்ள பெருமளவானோர் ஆடை தொழிற்சாலைக்கு அதிகாலை வேலைக்கு செல்லும் இளையவர்கள் பயத்துடன் செல்வதாகவும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |