2 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் ஒரே வீட்டில் இருவர் கைது
2 கோடி 30 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப் பொருட்களை சூட்சுமமாக வீடுகளில் பதுக்கி வைத்திருந்த இரு சந்தேக நபர்கள் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று(29.01.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது
அம்பாறை - பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியின் ஊடாக கொழும்பில் இருந்து கல்முனை வழியாக, சம்மாந்துறை பகுதிக்கு சென்ற அதி சொகுசு பேரூந்து ஒன்றில் நேற்று(29) சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொடுத்த வாக்குமூலம் மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி கே.என்.ஆர் பெரேராவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய சம்மாந்துறை புறநகர் பகுதிகளில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, ஒரே குடும்பத்தை சேர்ந்த மாமனார் மற்றும் மருமகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து, குஷ், கேரளா கஞ்சா, ஐஸ், ஹெரோயின், உட்பட பல வகையான போதைப் பொருட்கள் தொலைபேசிகள் ஒரு தொகை பணம் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணை
இந்நிலையில், கைதான 47 வயது 68 வயது மதிக்கத்தக்க இரு சந்தேக நபர்களும் சம்மாந்துறை பகுதியில் நீண்ட காலமாக போதைப்பொருட்களை வியாபாரம் செய்து வந்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர்களை இன்று(30) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அத்துடன், சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.









12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri