பௌத்த விகாரையில் ஜெர்மன் பெண்ணுக்கு நேர்ந்த கதி
மிஹிந்தலை விகாரையில் ஜெர்மன் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாக தொல்பொருள் ஊழியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நாட்டிற்கு வருகை சுற்றுலா பயணியான இளம் பெண் இன்று (16) வரலாற்று சிறப்புமிக்க மிஹிந்தலை விகாரைக்கு சென்று தூபியை பார்வையிட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்
குறித்த சந்தர்ப்பத்தில் மிஹிந்தலை விகாரைக்கு வழிபாட்டிற்காக வந்த குழுவொன்று, இளம் பெண் அலறுவதை கேட்டு சென்றபோது, சந்தேகநபர் தனது டீ-சர்ட்டால் இளம் பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொண்டிருந்ததை அவதானித்து இளம் பெண்ணை மீட்டுள்ளனர்.

இதன்போது தொல்பொருள் ஊழியர் ஒருவர் குறித்த பெண்ணை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாக முதற்கட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மிஹிந்தலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவ பரிசோதனைக்கு முன்னிலை
இதனையடுத்து, வெளிநாட்டு பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கருத்தை வெளிப்படுத்திய விஹாரையின் விகாராதிபதி, புனித தலத்தில் பொலிஸ் பாதுகாப்பு இல்லாமை காரணமாக இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகி வருவதாக கூறியுள்ளார்.
போலி கணக்குகளை பயன்படுத்தி QR குறியீடு மோசடி! உத்தியோகபூர்வ வலைத்தளம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
ஜனனி-சக்தியை காலி செய்ய தேவசகாயம் போட்ட கொடூரமான பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
தமிழ் புத்தாண்டு சிறப்பு பலன்கள்: அரசியலில் டாப்புக்கு செல்லப்போகும் கன்னி! இது நடந்தே தீரும் Manithan
ரவி-ஸ்ருதிக்கு ஷாக்கிங் விஷயம் கூறிய மீனா, விஜயாவை ஆப் செய்த பெண்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam