மட்டக்களப்பில் 2534 மில்லியன் ரூபா நிதியில் வீதிகளை மீளமைப்பதற்கு திட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 48 வீதிகளுக்கான 2534 மில்லியனுக்குரிய வேலைத்திட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது என தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
மண்முனை தென்எருவில்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று(29.01.2026) மாலை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் போது கடந்த காலத்தில் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் தொடர்பாகவும், கடந்த காலத்தில் இருந்த குறைபாடுகள் தொடர்பாகவும் ஆரம்பத்தில் கலந்துரையாடப்பட்டது.
இரண்டாவது வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக
இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், இந்த வருடத்தின் முதலாவது ஒருங்கிணைப்பு கூட்டமாக இந்த பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டமாக இது இன்றைய அமைந்திருந்தது.

கடந்த காலங்களில் இந்த பிரதேசத்தில் 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு ஊடாக 121 மில்லியன் ரூபாய் வேலைத்திட்டங்களை நாங்கள் முன்னெடுத்திருந்தோம்.
இன்று அந்த வேலைகள் அவ்வளவும் 100 வீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று எதிர்வரும் காலங்களில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டின் ஊடாக கிராமிய வீதிகள் அபிவிருத்திக்காகவும் ஆர்.டி.ஏ ஊடாக 37.5 நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
அதேபோன்று நீர்ப்பாசன அபிவிருத்திக்காக 10.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடுகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. நிதி ஒதுக்கீடுகளை நாங்கள் வழங்கி இருக்கின்றோம். இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது இரண்டாவது வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக பல லட்சம் பல மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான வேலைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு இருக்கின்றோம்.
கைவிடப்பட்ட பல வீட்டு திட்டங்கள்
அண்மையிலே தாக்கிய டித்வா புயலின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குகின்ற வேலை திட்டத்தில் நாங்கள் பல லட்சம் ரூபாய்களை இந்த மக்களுக்கு நாங்கள் வழங்கியிருந்தோம்.
பல திட்டங்கள் இப்போது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றது அனைத்தும் இன்று நாங்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்துக் கொண்டு வருகின்றோம்.

எங்களது மட்டக்களப்பு மாவட்டம் ஒரு அபிவிருத்தி பாதையை நோக்கி முன்னேற்றிக் கொண்டிருக்கின்றது மாவட்ட ரீதியில் இருக்கின்ற அனைத்து துறைகளிலும் ஊடாக நாங்கள் அந்த வேலைகளை முன்னெடுக்கிறோம்.
இம்முறை இந்த மாவட்டம் அபிவிருத்தி பாதையில் முன்னோக்கி கொண்டு நடக்கும் என்பதை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அதேபோன்று அனைத்து பிரதேசங்களிலும் குறிப்பாக கடந்த காலங்களில் கைவிடப்பட்ட பல வீட்டு திட்டங்களை நாங்கள் மீண்டும் முன் நகர்த்தியிருக்கிறோம்.
விசேடமாக ஜ-ரோட் எனப்படுகின்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற ஆர்.டீ.ஏ உடன் இணைந்து நாங்கள் முன்னெடுக்கின்ற அந்த வேலைத்திட்டமும் இப்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த பிரதேசங்களிலும் கைவிடப்பட்ட அந்த வீதி வேலைத்திட்டங்களையும் நாங்கள் முன்னெடுத்திருக்கின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Making Video: கூடவே வாழ்ந்த மாதிரி பேசுறீங்க... சுதா கொங்கராவிற்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! Manithan